நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்ததால் கடந்த 18 ஆம் தேதி மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தற்காலிக தடை விதித்திருந்தனர்.
தற்போது மாஞ்சோலை பகுதியில் மட்டும் தடை நீடிப்பதாக தெரிவித்தனர்.