புயல், வறட்சி, பனிப்பொழிவு, நிலத்தடி நீர் குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் கடலூர் மாவட்டத்தில் முந்திரி சாகுபடி குறைந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சரியான மகசூலும் இல்லாமல், முந்திரியின் விலையில் ஏற்றமும் இல்லாததால் விருத்தாசலம் அடுத்த இருசாலக்குப்பம், கோட்டேரி, நடியப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் மாற்று பயிருக்கு மாறும் விவசாயிகள் கண்ணீருடன் முந்திரி மரங்களை வெட்டி வருகின்றனர்.