திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தனியார் குப்பைக் கழிவுகள் சேகரிப்பு ஆலையில் தீப்பற்றியதில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியானதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
குடோனில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் எரிவதால் பெரும் புகை வெளியாவதுடன் ஆயில் பேரல்கள் வெடித்துச் சிதறுவதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.