கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள நடையனூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற ஐடி ஊழியருக்கும் தென் கொரியாவை சேர்ந்த மின்ஜுன் கிம் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
பெங்களூருவில் பணியாற்றி வரும் விஜயலட்சுமி, கொரிய மொழியில் புலமை பெற்றவர் என்பதால் தொழில் சம்மந்தமாக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு மின்ஜுன் கிம் பதிலளித்த பிறகு இருவர் இடையே ஏற்பட்ட நட்பு, கோம்புபாளையம் பெருமாள் கோவிலில் திருமணத்தில் முடிந்துள்ளது.
முதல்நாள் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றபோது குழந்தைகளுடன் இணைந்து இளம் ஜோடி உற்சாகமாக நடனமாடினர்.