ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுடன் அமைச்சரும் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்ற தேர்தலில் நிர்வாகிகளின் செயல்பாடுகள் நல்ல முடிவை தரும் பட்சத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்றும், பணி செய்யாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை இருக்கும் என அவர் கண்டிப்பு காட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.