சிவகங்கை அரசு மருத்துவமனையின் எக்கோ பரிசோதனை மையத்தில் நிரந்தர மருத்துவர் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் நிலவுவதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
நிரந்தர மருத்துவர் இல்லாததால் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இப்பரிசோதனை மையம் இயங்குவதாகவும், அதனால் ஒவ்வொரு முறையும் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.