கோயம்புத்தூர் ஒண்டிப்புதூரில் ஓட்டல் உரிமையாளர் மற்றும் அவரது தந்தையை தாக்கிய 5 பேர் கும்பலை சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
அங்குள்ள முருகன் செட்டிநாடு உணவகத்துக்கு சென்றிருந்த அந்த 5 பேரும் நாற்காலி ஒன்றை இழுத்து ஹோட்டலுக்குள் நடந்து போகும் வழியில் போட்டு அமர்ந்து கொண்டதாகவும், பிறருக்கு இடையூறு இன்றி ஓரமாக அமருமாறு சொன்னதால் தம்மையும் தமது தந்தையையும் அவர்கள் தாக்கியதாகவும் உரிமையாளர் ராமசாமி புகார் அளித்துள்ளார்.
உணவகத்தில் இருந்த மேஜை, குளிர்பதனப் பெட்டி மற்றும் தண்ணீர் குடங்களை அந்த 5 பேர் கும்பல் அடித்து உதைத்ததாகவும் ராமசாமி போலீசில் புகார் செய்துள்ளார்.