திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவ்வழக்கில் ஏற்கனவே 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றத்திற்கு உடந்தையாக செயல்பட்டதாக தனியார் விடுதி மேலாளர் சாமுவேல் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிறுமிகளை விடுதிக்குள் அழைத்துச்செல்ல சாமுவேல் உதவியதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.