ஈரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளை ஆக்கிரமித்திருந்த 300 க்கும் மேற்பட்ட கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
முனிசிபல் காலனி,பெரியவலசு,திரு .வி கா சாலை , ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக மாநகராட்சி ஆணையாளருக்கு புகார்கள் வந்த நிலையில் அப்பகுதியில் உள்ள பெயர்ப் பலைகைகள், நிழற்கூரைகள், விளம்பரப் பலகைகள் என அனைத்து ஆக்கிரமிப்புகளையும், மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்