மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்றும், அதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த அவர், ஓட்டுக்காக இட ஒதுக்கீடு குறித்து தவறான தகவல்களைக் கூறி மக்களை எதிர்க்கட்சிகள் திசை திருப்புவதாக அவர் குற்றம் சாட்டினார். இந்தத் தேர்தல் மட்டுமல்ல, 2029-ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றிபெற்று பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார் என்று அவர் கூறினார்.
பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று எதிர்க்கட்சிகள் கூறிவருவதாகவும், ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் எந்த இட ஒதுக்கீட்டையும் பிரதமர் மோடி ரத்து செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.