கோயம்புத்தூர் மதுரைக்கரை பகுதியில் மீன்கள் இறந்து மிதந்த மஞ்சப்பள்ளம் ஓடையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் கலந்ததால் நீர் மாசு ஏற்பட்டதால், மீன்கள் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், ஓடை நீர் மாதிரியும், தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரின் மாதிரியையும் ஆய்வுக்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.