சென்னை அண்ணா சாலையில் உள்ள ரிலையன்ஸ் ஷோரூமில் புதியதாக வாங்கிய வேர்ல்பூல் வாஷிங் மெஷின் அடிக்கடி பழுதானதால் அதனை ஷோரூம் முன்பு வைத்து பெண் ஒருவர் எரிக்க முற்பட்டார்.
இதுகுறித்து ஷோரூம் மேலாளர் அளித்த தகவலால் அங்குச் சென்ற போலீஸார் லாவண்யா என்ற அந்த பெண்ணை தடுத்தனர். தங்களால் சர்வீஸ் மட்டுமே செய்துத்தர முடியுமென ஷோரூம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் அந்த வாஷிங் மெஷினை அவர் அங்கேயே விட்டுச் சென்றார்.