மும்பையில் காற்றில் சரிந்து 14 பேர் உயிரிழக்க காரணமான விளம்பர பதாகையை வைத்த பவேஷ் பிண்டே என்பவர் தலைமறைவான நிலையில் தனிப்படை அமைத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
இதற்கு முன் சட்டவிரோத விளம்பர பதாகைகள் வைத்ததாக 21 முறை பவேஷுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில்,
காட்கோபாரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி 100 அடி உயரத்திற்கு அவர் பதாகை வைத்ததால் விபத்து நேரிட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
பதாகையை வெட்டி அகற்றும் பணி 2ஆம் நாளாக நீடித்தது.