​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது வன்முறை

Published : May 14, 2024 7:41 AM

ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது வன்முறை

May 14, 2024 7:41 AM

ஆந்திராவில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது பல்வேறு இடங்களில் வன்முறைகளும், அரசியல் கட்சியினரிடையே மோதல், கல்வீச்சு சம்பவங்களும் நடந்தேறின.

பால்நாடு, அனந்தபூர், அன்னமய்யா மாவட்டங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளைச் சேர்ந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

வாக்குப்பதிவு முடிந்த பிறகும் இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீவைத்து எரிக்கப்பட்டன.

பல்நாடு மாவட்டத்தில், குர்ரசாலா பகுதியில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸார் கல்வீசித் தாக்கிக்கொண்டனர். போலீஸார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.

டோட்லேரு பகுதியில் தெலுங்கு தேச எம்.பி கிருஷ்ணதேவராயலுவின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

ஆந்திரா முழுவதும் நடைபெற்ற தேர்தல் வன்முறை தொடர்பாக, எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா தெரிவித்தார்.