தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பணம் கொடுக்காததால் சரக்கு தர மறுத்த ஒயின் ஷாப் பார் ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கயத்தாறு சிதம்பரம்பட்டியை சேர்ந்த மூக்கையா பாண்டியன் என்பவர் தனக்கு ஓசியில் மது தர மறுத்ததால் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பார் ஊழியர் குருசாமியை சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீசார் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மூக்கையா பாண்டியனை தேடி வருகின்றனர்.