பல்வேறு துறைகளிலும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் தேவை அதிகம் இருப்பதால் அதை கருத்தில்கொண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் ஏ.ஐ மற்றும் டேட்டா அனலெட்டிக்ஸ் பி டெக் பாடப்பிரிவு இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளதாக இயக்குர் காமகோடி தெரிவித்தார்.
ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் 513 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் , ஐ.ஐ.டியில் அல்ல எங்கு படித்தாலும் மாணவர்கள் திறமைக்கேற்ற வேலை கிடைக்கும் என்றார்.