சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் உத்தமசோழபுரம் அருகே சென்று கொண்டிருந்த டிராக்டரின் பின்னால் கார் மோதியதில், டிராக்டர் ஓட்டுநர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
சில நொடிகளில் கார் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் டிராக்டருக்கும் லாரிக்கும் நடுவே சிக்கி கார் நசுங்கியது. உள்ளே இருந்த 4 பேர் படுகாயமடைந்த நிலையில் நீண்ட நேரம் போராடி மீட்கப்பட்டனர்.