காஸாவை விட்டு வெளியேறுமாறு ஹமாஸ் விதித்த நிபந்தனையை இஸ்ரேல் அரசு ஏற்க மறுத்துவிட்டது. அதை தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கூட்டு பிரார்த்தனை செய்துவிட்டு ரஃபா நகருக்குள் நுழைந்தனர்.
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தினால் பிணை கைதிகளை விடுவிக்க மாட்டோம் என ஹமாஸ் அறிவித்திருந்த நிலையில், பிணை கைதிகளின் உறவினர்கள் சிலர், இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து போர் நிறுத்ததிற்கு ஒப்புக்கொள்ளுமாறு வலியுறுத்தினர்.
அப்போது பிணை கைதி ஒருவரின் தந்தை தமது தொலைபேசி எண்ணை கேமரா முன் காட்டி, தம்முடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு ஹமாஸை கேட்டுக்கொண்டார்.