விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்த நிலையில், ரெட்டணை மார்க்கத்தில் இயக்கப்படும் தடம் எண் 16சி பேருந்தில் பழுதடைந்த மேற்கூரையிலிருந்து மழைநீர் ஒழுகியதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் பெய்த மழையால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கி குளம்போல் தேங்கியது.