சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தங்கமாபுரிபட்டினத்தில் அதிகாலையில் பெய்த மழை நீருடன் கழிவு நீர் கலந்து அப்பகுதி வீடுகளுக்குள் சுமார் 2 அடி உயரத்துக்கு தேங்கி நின்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனால் தரையில் இருந்த பொருட்கள் சேதமடைந்ததுடன் நோய் தொற்று ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். கழிவு நீர் கால்வாயை முறையாக தூர்வாராததே வீடுகளுக்குள் தண்ணீர் வரக்காரணம் என்றும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.