சேலம் அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 22 வயதான சந்தோஷ்குமார் என்ற இளைஞரின் இதயம் 11 வயது சிறுமிக்கு பொருத்துவதற்காக சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
நுங்கு வெட்டுவதற்காக மரத்தின் மீது ஏறி தவறி விழுந்ததால் மூளைச்சாவு அடைந்த அவரது கல்லீரல், நுரையீரல், சிறுநீரகங்கள், சிறுகுடல், கண் கார்னியா போன்றவையும் வெவ்வேறு நபர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. இதையடுத்து அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.