கொடைக்கானல் நுழைவாயில் சோதனை சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இ-பாஸ் தொடர்பான அறிவிப்புப் பலகைகளோ விளக்கங்களோ இல்லாததால் என்ன செய்வது என்ற குழப்பம் நிலவுவதாக சுற்றுலா பயணிகள் கூறினர்.
மறுபுறம், நுழைவாயில் சோதனை சாவடியில் நெட்வொர்க் பிரச்சனையால் தாங்கள் லோக்கல் பாஸ் பெற்றுள்ள போதிலும் பதிவு செய்யவில்லை என வருவதாகவும் அதனால் தாங்களும் காத்திருக்க நேரிடுவதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.