சாதிய மோதலை தூண்டும் வகையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் மதியழகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குன்னம் அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த சிலர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்தனர்.
கூடவே மதியழகன் சாதி ரீதியாக பேசியதாகக் கூறி வாட்ஸ்ஆப் மற்றும் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட 3 ஆடியோ கிளிப்புகளையும் அவர்கள் எஸ்.பி.யிடம் வழங்கினர். இதனிடையே, வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சில கிராமங்களில் மதியழகனை கண்டிப்பதாகக் கூறி வேப்பூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. என்ற பெயரில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.