இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் மூன்றாவது விண்வெளி பயணம் தொழில்நுட்பக்கோளாறால் ஒத்திவைக்கப்பட்டது.
முதன் முறையாக போயிங் நிறுவனம் வடிவமைத்துள்ள ஸ்டார்லைனர் விண்கலத்தில் அவர் புறப்படத் தயாராக இருந்த நிலையில், 90 நிமிடங்களுக்கு முன் விண்கலத்தை தாங்கி செல்லும் அட்லஸ் ராக்கெட்டின் ஆக்சிஜன் வால்வில் பழுது ஏற்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது.
இதையடுத்து, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த சுனிதா வில்லியம்ஸும், சக விண்வெளி வீரரான புட்ச் வில்மோரும் திரும்ப அழைக்கப்பட்டனர். மனிதனை விண்வெளிக்கு அழைத்து செல்லும் போயிங் நிறுவனத்தின் முயற்சி, தொடர் தொழில் நுட்பக்கோளாறுகளால் 5 ஆண்டுகளாகத் தள்ளிப்போய்வருகிறது.