ஆந்திராவில், ஜெகன் மோகன் ஆட்சியில் வளர்ச்சி பூஜ்ஜியமாகவும், நூறு சதவீத அளவுக்கு ஜெட் வேகத்தில் ஊழல் நடைபெறுவதாகவும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்தார்.
கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர், ஆந்திரா வளர்ச்சி அடைய இரட்டை இன்ஜின் ஆட்சி அமைய வேண்டும் என்று கூறினார்.
மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஆந்திர அரசு தாமதம் செய்து வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
டெல்லி-மும்பை வழித்தடம் போல் விசாகப்பட்டினம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழித்தடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, ராஜமகேந்திரவரம் விமான நிலையம் ஆகியவை, ஆந்திராவின் தோற்றத்தை மாற்றும் என்றும் தெரிவித்தார்.