மதுரையில், உயிருடன் இருக்கும் தம்பதியரை இறந்து விட்டதாகக் கூறி இறப்பு சான்றிதழ் பெற்று அதன் மூலமாக போலி வாரிசு சான்றிதழும் வாங்கி 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம் வேறொருவருக்கு பத்திரம் முடிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மத்திய அரசு முன்னாள் ஊழியர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தனது நிலம் சுத்தப்படுத்தப்பட்டிருப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினரிடம் கேட்ட போது அந்த இடத்தை வேறொருவர் வாங்கி வீடு கட்ட தயார் செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தனது நிலத்திற்கு வில்லங்கச் சான்று பார்த்த போது இடம் வேறொருவர் பெயருக்கு பத்திரம் செய்யப்பட்டிருந்தது தெரிய வரவே இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.