​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னைக்கு கோடை மழை பெய்ய தற்போது வாய்ப்பில்லை... எல் நினோ விளைவால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிப்பு

Published : May 03, 2024 9:09 PM

சென்னைக்கு கோடை மழை பெய்ய தற்போது வாய்ப்பில்லை... எல் நினோ விளைவால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிப்பு

May 03, 2024 9:09 PM

உலகளவில் பருவ நிலைகளில் பாதிப்புக்களை உண்டாக்கும் எல் நினோ விளைவு காரணமாகவே தமிழகத்தில் வெப்பம் அதிகரித்துள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

எல் நினோ காரணமாக காற்று மண்டலத்தில் எதிர்சுழற்சி ஏற்படுவதால் மேகக் கூட்டங்கள் உருவாவதில்லை என்றும், அதனால் சூரிய ஒளி நேரடியாக பூமி மீது விழுந்து வெப்பம் அதிகரிப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு கோடை மழை பெய்ய வாய்ப்பில்லை என்று கூறிய பாலச்சந்திரன், நாமக்கல் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்தின் ஒரு நாளில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரியாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரியாகவும் பதிவானதை சுட்டிக்காட்டி, இது போல 20 டிகிரி வேறுபாட்டுக்கு கோடை மழை இல்லாததே காரணம் என்றார்.