நீலகிரி மாவட்டத்தில் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளும், வனப்பகுதிகளும் வறண்டு காணப்படுகின்றன.
பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது. 33 ஆண்டுகளுக்குப் பிறகு குந்தா அணை முழுவதும் வற்றத் தொடங்கியுள்ளது.
அப்பர் பவானி, எமரால்டு, அவலாஞ்சி, காட்டுக்குப்பை உள்ளிட்ட முக்கிய நீர்மின் உற்பத்தி அணைகள் வற்றி வருகின்றன.