இந்தியா, சீனா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகள் ஏன் பொருளாதாரத்தில் பின்தங்குகின்றன, அமெரிக்கா ஏன் முன்னேறுகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விளக்கம் அளித்துள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற புலம்பெயர்ந்தோரிடம் தேர்தல் நிதி திரட்டும் கூட்டத்தில் பேசிய பைடன், அமெரிக்கா புலம்பெயர்ந்தோரை வரவேற்பதாகவும், அவர்கள் நாட்டிற்கு வலிமை சேர்ப்பதாகவும் கூறினார்.
ஆனால், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அந்நிய வெறுப்பு கொள்கை கொண்டவை என்று அப்போது சாடினார்.