தீவிரவாத தாக்குதல் நடந்தால், அதுதொடர்பான ஆவணங்களை அண்டை நாட்டிற்கு அனுப்பி விசாரணை நடத்துமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டிருந்த நிலை மாறி விட்டதாகவும் தீவிரவாதிகள் பதறும் அளவு உடனுக்குடன் புதிய இந்தியா பதிலடி அளித்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
குஜராத்தின் ஹிமாத்நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பலவீனமான அரசுகள் தீவிரவாதிகளை தப்ப விட்டுக் கொண்டிருந்ததாகவும், புதிய இந்தியாவில் காஷ்மீரின் லால் சவுக்கில் தேசியக் கொடியை பட்டொளி வீசிப் பறக்கச் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
முத்தலாக் தடை மூலம் இஸ்லாமிய சகோதரிகளுக்கு பாதுகாப்பு அளித்திருப்பதாகவும் வாக்கு வங்கி அரசியலுக்காக அதை செய்ய காங்கிரஸ் தவறியதாகவும் பிரதமர் விமர்சித்தார்.