இந்தோனேசியாவில் சுனாமி அச்சுறுத்தல் காரணமாக தகுலாண்டாங் தீவில் இருந்து 12,000 பேர் மீட்பு
Published : May 01, 2024 5:13 PM
இந்தோனேசியாவில் சுனாமி அச்சுறுத்தல் காரணமாக தகுலாண்டாங் தீவில் இருந்து 12,000 பேர் மீட்பு
May 01, 2024 5:13 PM
இந்தோனேசியாவின் தீவு ஒன்றில் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால், அருகில் உள்ள தீவுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
சுலவேசி தீவின் வடபகுதியில் உள்ள மவுன்ட் ருவாங்க் எரிமலை வெடித்ததில் வெண்புகையுடன் கூடிய சாம்பல், மலைக்கு மேல் சுமார் 500 மீட்டர் உயரத்துக்கு வெளியேறி வருகிறது.
எரிமலை சீற்றத்தால் சுனாமி தாக்கக்கூடும் என்று அச்சம் எழுந்ததால் மீட்புக் குழுவினர் குலாண்டாங் தீவில் வசிக்கும் 12 ஆயிரம் பேரை படகுகள் மூலம் அழைத்துச் சென்று முகாம்களில் தங்க வைத்தனர்.