நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ள ஆந்திராவில் , தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேசிய மகளிர் ஆணைய தலைவரும் பாஜக முக்கிய பிரமுகருமான நடிகை குஷ்பூ பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
விசாகபட்டினம் அருகே அரக்கு வந்த குஷ்புக்கு அங்குள்ள மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடி வரவேற்பு அளித்தனர்.
பின்னர், அரக்கு நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கீதாவுக்கு ஆதரவாக குஷ்பு வாக்கு சேகரித்தார்.