​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்ட்ராங் ரூமில் உள்ள 76 சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தன

Published : May 01, 2024 9:06 AM

ஸ்ட்ராங் ரூமில் உள்ள 76 சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தன

May 01, 2024 9:06 AM

தென்காசியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமின் 76 சிசிடிவி கேமராக்கள் சுமார் 3 மணி நேரம் செயலிழந்தன.

கொடிக் குறிச்சி தனியார் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் கேமராக்கள் செயல் இழந்த நிலையில், கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் கேமராக்கள் இயங்கத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஏற்கனவே நீலகிரி மற்றும் ஈரோட்டில் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் சில நிமிடங்கள் செயலலிழந்த பின் மீண்டும் செயல்பட தொடங்கின.