​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தும் இட கட்டணங்களில் மாற்றம்

Published : May 01, 2024 7:02 AM

மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தும் இட கட்டணங்களில் மாற்றம்

May 01, 2024 7:02 AM

சென்னை மெட்ரோ இரயிலில், கடந்த 30 நாட்களில் குறைந்தது 15 பயணங்கள் செய்த மெட்ரோ ரயில் பயணிகளுக்கு விம்கோ நகர் பணிமனை, ஸ்ரீ தியாகராய கல்லூரி, நேரு பூங்கா, கோயம்பேடு, அசோக் நகர் மற்றும் ஆலந்தூர் ஆகிய 6 மெட்ரோ இரயில் நிலையங்களில் மாதாந்திர பாஸ் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

15-க்கும் குறைவான பயணம் செய்தவர்களுக்கு அரும்பாக்கம் மெட்ரோ மற்றும் பரங்கி மலை மெட்ரோ இரயில் நிலையங்களில் மாதாந்திர வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக்கட்டணம் இன்றுமுதல் அமலுக்கு வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.