கோடை காலத்தில் கருப்பு நிற குடைகளை பயன்படுத்துவதே உடல் அரோக்கியத்துக்கு உகந்தது என இந்திய வானிலை மைய விஞ்ஞானி பிரசாத் தெரிவித்துள்ளார்.
கருப்பு நிற குடைகள், சூரிய ஒளியை உள்வாங்கி அகச்சிவப்பு கதிர்களை வெளியிடுவதால், புற ஊதா கதிர்கள் குடை வழியாக ஊடுருவாது என அவர் கூறியுள்ளார்.
அதே சமயம், சூரிய கதிர்களை சிதறச் செய்யும் ஆற்றல் வெள்ளை நிற குடைகளுக்கு இருந்தாலும், தோலுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் அதன் வழியாக ஊடுருவிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.