கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் கோடை வெயிலின் தாக்கத்தால் முந்திரி பூக்கள் மற்றும் பிஞ்சுகள் கருகுவதால் முந்திரி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக ஒரு ஏக்கருக்கு மூன்று மூட்டைகள் வரை முந்திரி கொட்டைகள் கிடைக்கும் எனவும், இந்த ஆண்டு ஒரு மூட்டை கிடைப்பதே கஷ்டம் எனவும் விவசாயிகள் கூறினர்.
முந்திரி விவசாயம் செய்துவரும் இயக்குநர் தங்கர்பச்சன், பல பகுதிகளில் பயிர் கருகிவிட்ட நிலையில் முந்திரிக்கு பயிர் காப்பீட்டு திட்டம் இருந்தால் இந்த இழப்பீட்டிலிருந்து மீண்டு வருவதற்கான வழி கிடைக்கும் என தெரிவித்தார்.