தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கடும் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தும் அதை எதிர்கொள்ள தமிழக அரசிடம் எந்தச் செயல் திட்டமும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கம் தொகுதிக்குள்பட்ட உச்சப்பட்டி,,சிவரக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீர் நிலைகளில் 17 சதவீதம் மட்டுமே நீர் இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளதாக தெரிவித்தார்.