திருமணம் எப்போது என்பதை இதுவரை முடிவு செய்யாததால் தனது கருமுட்டைகளை டாக்டர்கள் உதவியுடன் மருத்துவ ரீதியாக சேகரித்து பாதுகாப்பாக வைத்துள்ளதாக நெஞ்சில் துணிவிருந்தால், பட்டாஸ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள மெஹரீன் பிர்ஜாதா தெரிவித்துள்ளார்.
தனது தனிப்பட்ட இந்த கருத்துப்பகிர்வு குழந்தை பிறப்பை தள்ளிப்போட நினைக்கும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.