​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பட்டப்பகலில் 10 பேர் கும்பல் ஜாம்பி போல அட்டகாசம் வீட்டுக்குள் விழுந்த கற்கள்..! அவசர உதவிக்கு வராத போலீஸார்

Published : Apr 30, 2024 10:19 AM



பட்டப்பகலில் 10 பேர் கும்பல் ஜாம்பி போல அட்டகாசம் வீட்டுக்குள் விழுந்த கற்கள்..! அவசர உதவிக்கு வராத போலீஸார்

Apr 30, 2024 10:19 AM

கரூரில் பட்டபகலில் ஒரு வீட்டுக்குள் நுழைய முயன்ற 10 பேர் கும்பலை வீட்டு உரிமையாளர்கள் தடுத்த நிலையில், அந்த வீட்டில் சிசிடிவி கேமரா இருப்பதை கண்டதும் தூரத்தில் இருந்து கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு காந்திகிராமம் ஜி.ஆர்.நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் மனோகரன், சிமெண்ட் ஆலையில் துணை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கடந்த 27ம் தேதி மதியம் 1 மணியளவில் 10 பேர் கும்பல், மனோகரன் வீட்டிற்கு வந்து கேட்டில் ஏறி வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.

அவர்களை மனோகரன் குடும்பத்தினர் செல்போனில் படம்பிடித்தபடி தடுத்தனர்

வீட்டில் சிசிடிவி காமிரா இருப்பதை கண்டதும் இறங்கி ஓடிய கும்பல் எதிர்புறம் சாலையோரம் கிடந்த செங்கற்களை எடுத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

மனோகரன் வீட்டின் முகப்பு விளக்குகளை அவர்கள் அடித்து உடைத்தனர்.

அவர்கள் வீசிய கற்களால் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் பக்கவாட்டு மற்றும் பின்பக்க கண்ணாடிகள் சேதமடைந்தன.

காவல் துறையின் அவசர உதவி எண்ணிற்கு போன் செய்து தகவல் தெரிவித்த நிலையில் 2 மணி நேரத்திற்கும் மேல் ஆகியும் பசுபதிபாளையம் காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என மனோகரன் குற்றம் சாட்டினார்.

கடந்த 2022ஆம் ஆண்டு செங்குந்தபுரத்தில் செயல்படும் தனியார் பைனான்சியரிடம் தனது வீட்டை அடமானமாக வைத்து 23 லட்ச ரூபாய் கடன் பெற்றதாகவும், அசல் மற்றும் வட்டியுடன் சுமார் 50 லட்சம் ரூபாய் வரை திருப்பிச் செலுத்திய நிலையில் மேலும் 10 லட்சம் ரூபாய் கேட்டு பைனான்ஸியர் தனது வீட்டை அபகரிக்க கும்பலை ஏவி உள்ளதாகவும் தெரிவித்த மனோகரன் , சம்பந்தப்பட்ட பைனான்ஸியர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறினார்.

இந்த தாக்குதல் குறித்து பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் முத்துக்குமாரிடம் கேட்ட போது, கல்வீசியதாக 4 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.