ஐரோப்பிய நாடான ஜார்ஜியாவில் ரஷ்யாவை கண்டித்து பேரணி நடத்தப்பட்டது. ஏற்கனவே கைவிடப்பட்ட மசோதா ஒன்றை ரஷ்ய தூண்டுதல் காரணமாக மீண்டும் சட்டமாக்க முயற்சி நடப்பதாக கூறி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேரணி சென்றனர்.
ஜார்ஜியா நாடாளுமன்றத்தை நோக்கி சென்ற பேரணியில் பங்கேற்றவர்கள், ஐரோப்பிய யூனியனில் ஜார்ஜியா உறுப்பினராக இடம்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும் அரசுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்படும் பேரணி ஆட்சியாளர்கள் பணம் கொடுத்து நடத்தும் பேரணி என்று விமர்சித்தனர்