கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவிக்கு இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்த நிர்மலா தேவி கடந்த 2018-இல் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தாக ஆடியோக்கள் வெளியானதை அடுத்து அவரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி கைது செய்யப்பட்டனர்.
சி.பி.சி.ஐ.டி. இவ்வழக்கை விசாரித்து 1160 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இவ்வழக்கில் நிர்மலா தேவியை குற்றவாளி என அறிவித்த ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்ற நீதிபதி, முருகன், கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
நிர்மலா தேவிக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்