சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி வெகுசிறப்பாக நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்குமாட வீதிகளில் வலம் வந்த பார்த்தசாரதி பெருமாளை கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தரிசித்தனர்.