​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரு நாளைக்கு ரூ.1.85 லட்சம் ஸ்டார் ஓட்டல் சாஸில் புழுக்கள் நெளிந்ததால் அதிர்ச்சி..! குன்னூரில் நடிகர் உரிமைக்குரல்.!

Published : Apr 29, 2024 10:23 AM



ஒரு நாளைக்கு ரூ.1.85 லட்சம் ஸ்டார் ஓட்டல் சாஸில் புழுக்கள் நெளிந்ததால் அதிர்ச்சி..! குன்னூரில் நடிகர் உரிமைக்குரல்.!

Apr 29, 2024 10:23 AM

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள எம்சிவர் நட்சத்திர ஓட்டலில் பிரைட் ரைசுக்கு வழங்கப்பட்ட தக்காளி சாஸில் புழுக்கள் நெளிந்ததாக, ஓட்டல் முன்பு, நடிகர், போராட்டம் நடத்தினார். 

ஊட்டி குன்னூரில் உள்ள எம்சிவர் வில்லா என்ற ஸ்டார் ஓட்டலுக்கு நடிகர் விஜய் விஷ்வா தனது நண்பர்களுடன் தங்குவதற்கு சென்றுள்ளார்.

ஒரு நாள் தங்குவதற்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் கட்டணம் என்று சொன்னதால் தமக்கு கட்டுபடியாகாது என்று வெளியேறியுள்ளார்.

அந்த ஓட்டலுக்கு அருகில் உணவகம் இல்லாததால், எம்சிவர் ஓட்டலுக்கு சொந்தமான ரெஸ்ட்டாரண்டில் ஃபிரைடு ரைஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.

சாப்பிட தொடங்கிய சிறிது நேரத்தில் ஓட்டலில் பிளாஸ்டிக் பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த தக்காளி சாஸ் குமாட்ட தொடங்கி உள்ளது.

அந்த சாஸ் பாட்டிலை திறந்து பார்த்தபோது அதனுள் வெள்ளை நிற புழுக்கள் நெளிந்ததால் விஜய் விஷ்வாவும் அவரது நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஓட்டல் ஊழியர்களிடம் கேட்ட போது முறையான பதில் தெரிவிக்காமல் பணத்தை கொடுத்து விட்டு செல்லுங்கள் என அதிகாரமாக பேசியதாக கூறிய விஜய் விஷ்வா, ஓட்டல் வாசலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்

புகார் தெரிவித்தும் உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வராத நிலையில், தகவல் அறிந்து சென்ற செய்தியாளரை கண்டதும், நடந்த தவறுக்கு ஓட்டல் நிர்வாகம் விஜய் விஷ்வாவிடம் மன்னிப்புக் கேட்டனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த ஓட்டல் மேலாளர் டோமினிக் சேவியர், தங்கள் ஓட்டலில் வாங்கிய ஃபிரைட் ரைசுக்கு வழங்கப்பட்ட தக்காளி சாஸில் புழு இருப்பதாக விருந்தினர்கள் தெரிவித்ததாக கூறினார்.

அந்த தக்காளி சாஸை நாங்கள் தயாரிப்பது கிடையாது என்றும், வெளியில் இருந்து வாங்குவதாகவும் கூறிய ஓட்டல் மேலாளர், தங்கள் தரப்பில் வாடிக்கையாளரிடம் மன்னிப்புக் கேட்டதாக தெரிவித்தார்.