​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 பைக்குகள் மீது கார் மோதி கோர விபத்து

Published : Apr 29, 2024 10:17 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 பைக்குகள் மீது கார் மோதி கோர விபத்து

Apr 29, 2024 10:17 AM

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியபணகமுட்லு அருகே நடந்த சாலை விபத்தில் ஒரு வயது ஆண் குழந்தை, 2 வயது பெண் குழந்தை, மற்றொரு பைக்கில் வந்த நபர் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.

பெற்றோருடன் பைக்கில் சென்ற 2 குழந்தைகள் மீதும், மற்றொரு பைக்கில் வந்துகொண்டிருந்த நபர் மீதும், எதிரில், கிருஷ்ணகிரியில் இருந்து வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

இதில் பெற்றோர் கண் எதிரே 2 குழந்தைகளும் உயிரிழந்தன. தம்பதியர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.