கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்பதாக கூறி சென்னையைச் சேர்ந்த ஆடிட்டரை மிரட்டி சைபர் கிரைம் மோசடி கும்பல் 42 ஆயிரம் ரூபாயை சுருட்டி இருக்கிறது.
கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சூரியன் என்பவரிடம் வீடியோ காலில் காவல் சீருடையில் பேசிய நபர், மும்பை காவல்துறையில் இருந்து பேசுவதாக கூறி அவர் குறிப்பிட்ட வங்கிக்கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்ய வைத்துள்ளார்.
இது போன்ற மோசடிகள் அதிகரித்து வருவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஆடியோ வெளியிட்டுள்ளனர்.