​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆர்டர் செய்த உணவு தாமதமானது குறித்து கேட்டதால் வாக்குவாதம், கைகலப்பு

Published : Apr 28, 2024 7:07 AM

ஆர்டர் செய்த உணவு தாமதமானது குறித்து கேட்டதால் வாக்குவாதம், கைகலப்பு

Apr 28, 2024 7:07 AM

கொடைக்கானலில் டார்லிங் ரெஸ்டாரண்ட் என்ற உணவகத்தில் உணவருந்தச் சென்ற நெல்லையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கும் உணவக ஊழியர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி சுற்றுலாப் பயணிகள் சாலை மறியலில் இறங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆர்டர் செய்த உணவு தாமதமானது குறித்து கேட்டபோது உணவக ஊழியர்கள் தங்களை தகாத முறையில் பேசி தாக்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.