அமெரிக்காவில், 2020-ஆம் ஆண்டு, காவலர் ஒருவர் தனது முழங்காலால் கழுத்தில் அழுத்தியதில், ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பின இளைஞர் உயிரிழந்தது இனவெறிக்கு எதிராக பெரியளவிலான போராட்டங்களுக்கு வழிவகுத்த நிலையில் மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் ஒஹையோ மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
பிராங்க் டைசன் என்ற கருப்பினத்தவர் கடந்த 18-ஆம் தேதி, காரை ஓட்டிச் சென்றபோது மின் கம்பம் மீது மோதியதால், காரை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. அவரை பிடித்து கைகளுக்கு விலங்கிட்ட காவலர் ஒருவர், பிராங்க் திமிறாமல் இருக்க தனது முழங்காலை கழுத்தில் வைத்து அழுத்தினார்.
ஜார்ஜ் பிளாயிடை போலவே, பிராங்க் டைசனும் தன்னால் சுவாசிக்க முடியவில்லை என கூறியபடி மூர்ச்சையானார்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதில் தொடர்புடைய 2 காவலர்களுக்கும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.