​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திராவில் மாமூல் கேட்ட அடாவடி கும்பலை ஓடவிட்ட தூத்துக்குடி லாரி ஓட்டுநர்..! ஏம்ல உனக்கு துட்டு தரணும்..?

Published : Apr 27, 2024 7:33 AM



ஆந்திராவில் மாமூல் கேட்ட அடாவடி கும்பலை ஓடவிட்ட தூத்துக்குடி லாரி ஓட்டுநர்..! ஏம்ல உனக்கு துட்டு தரணும்..?

Apr 27, 2024 7:33 AM

ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரும்பு லோடு ஏற்றிய லாரியை மறித்து மாமூல் கேட்டு அடாவடி செய்த கும்பலை தூத்துக்குடி லாரி ஓட்டுனர் ஓடவிட்ட சம்பவத்தின் பரபரப்பான வீடியோ வெளியாகி உள்ளது.

மாமூல் தராமல் லாரியை விடமாட்டேன் என்று மறியலில் ஈடுபட்டவரை ஓட விட்ட காட்சிகள் தான் இவை..!

தூத்துக்குடியை சேர்ந்த லாரி ஒன்று ஆந்திர மாநிலம் நாயுடு பேட்டையில் உள்ள அகர்வால் ஸ்டீல்ஸ் என்ற கம்பெனிக்கு இரும்பு லோடு ஏற்றுவதற்கு சென்றுள்ளது. லாரியை தூத்துக்குடி இளைஞர் ஸ்டாலோன் ஓட்டினார்.

அங்கு லோடு ஏற்றிக்கொண்டு வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியே வந்த லாரியை உள்ளூர் மாமூல் கும்பல் ஒன்று வழிமறித்து தங்கள் ஊருக்கு 400 ரூபாய் மாமூல் தரவேண்டும் என்று கேட்டுள்ளனர்.

லாரி ஓட்டுனர் கொடுக்க மறுத்ததால் லாரியை செல்லவிடாமல் அடாவடி செய்துள்ளனர்

இரவு 9 மணிக்கு நாயுடுபேட்டை லாரி அசோசியேசன் செயலாளர் என்ற பெயரில் செல்போனில் பேசிய நபர் லாரி உரிமையாளரை பேச கூறியுள்ளார்.

அவரிடம் தூத்துக்குடி ஈ வாகன் சேவை அமைப்பு நிர்வாகி ஷாகுல் என்பவர் பேசிய போது, எங்க ஊர் லாரியை விட குறைந்த வாடகைக்கு சரக்கு ஏற்றி போறீங்க, அதனால் தங்கள் லாரி அசோசியேசன்க்கு நன்கொடையாக 400 ரூபாய் கொடுத்தால் உங்கள் லாரிக்கு பாதுகாப்பு கொடுப்போம் என்று கூற, சாலையில் தவிக்கும்போது உதவாத உங்களுக்கு எதற்கு பணம் தரவேண்டும் ? என்று எதிர்த்து கேட்ட ஷாகுல், ஓட்டுனரை லாரியை எடுத்துக் கொண்டு தைரியமாக வருமாறு கூறி உள்ளார்.

லாரி புறப்பட தயாரானதும் கைதி படத்தில் ரவுடிகள் லாரியை மறிக்க கையாளும் உத்திகளை மாமூல் கும்பல் கையாண்டுள்ளது

தடைகளை தட்டிவிட்டு லாரியை ஓட்டி வந்த போது ஜாம்பி மாதிரி லாரியை செல்ல விடாமல் முன்பாக வந்து லாரிக்குள் விழுவது போல மிரட்டி உள்ளான்.

ஒரு கட்டத்தில் லாரியின் வேகத்தை கூடியதால் மாமூலுக்காக லாரியை மறித்தவன் தலை தெறிக்க ஓட்டம் பிடித்துள்ளான். அவர்கள் கேட்ட மாமூலை கொடுக்காமல் லாரியை கன்னியாகுமரிக்கு ஓட்டிச் சென்றுள்ளார்.

தமிழகத்தில் நேசனல் பெர்மிட்டுக்கு என்று லாரிக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை போக்குவரத்து துறைக்கு கட்டணம் செலுத்தப்படும் நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தமிழக லாரிகளை கூலிக்கு ஆள் வைத்து மறித்து டோல்கேட்டுக்கு இணையாக மாமூல் வசூலிப்பதாகவும் தமிழக அரசு அந்த மாநில அரசுகளுடன் பேசி இந்த மாமூல் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே லாரி உரிமையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.