​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலையில் கிடந்த கருப்பு..! அடுத்தடுத்து வழுக்கி விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..! ஆவியா..? பேயா..? பூதமா..? யார் காரணம் ?

Published : Apr 27, 2024 6:35 AM



சாலையில் கிடந்த கருப்பு..! அடுத்தடுத்து வழுக்கி விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..! ஆவியா..? பேயா..? பூதமா..? யார் காரணம் ?

Apr 27, 2024 6:35 AM

காரைக்கால் மாவட்டம் நடுஓடுதுறை தேசிய நெடுஞ்சாலை வளைவு பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 7 இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாயினர். பைக்குகளை விழவைத்த நிலக்கரி துகள்கள் சாலையில் தேங்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

அடுத்தடுத்து வாகன ஓட்டிகள் சாலையில் சறுக்கி விழுந்த காட்சிகள் தான் இவை..!

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம் கீழவாஞ்சூர் பகுதியில் உள்ள துறைமுகத்திற்கு கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி ரயில் மட்டுமன்றி சாலை மார்க்கமாக நாகை, திருவாரூர் மாவட்டங்கள் வழியாகவும், காரைக்கால் வழியாகவும் டாரஸ் லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகிறது. லாரிகளின் கொள்ளளவை விட கூடுதலாக நிலக்கரியை ஏற்றிச்செல்வதால் வளைவுப்பகுதியில் திரும்பும் போது லாரிகளிலிருந்து சாலை ஓரமாக நிலக்கரி கொட்டிக் கொண்டே செல்வதாக கூறப்படுகிறது.

சாலையோரம் கொட்டி செல்லும் நிலக்கரி துகள்கள் சாலையில் தேங்காமல் சுத்தப்படுத்த பொறுப்பேற்றுள்ள துறைமுக நிர்வாகம், பணிகளை முறையாக கண்காணிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் காரைக்கால் நடுஓடுதுறை தேசிய நெடுஞ்சாலை வளைவு பகுதியில் செல்லும் இருசக்கர வாகனங்கள் நிலக்கரி துகள்கள் மீது ஏறி நிலை தடுமாறி சறுக்கி கீழே விழுந்து விபத்தில் சிக்குவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வெள்ளிக்கிழமை காலை முதல் மதியம் வரையில் சுமார் 7 பேர் அடுத்தடுத்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாயினர்.

குறிப்பாக 2மணி நேரத்தில் 6பேர் தொடர்ர்சியாக விபத்துக்குள்ளாகி கை கால்களில் காயம் அடைந்த தகவல் அறிந்து நமது செய்தியாளர் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் 7 வதாக ஒரு விபத்து ஏற்பட்டு சேகர் என்ற இரு சக்கர வாகன ஓட்டி கையில் காயத்துடன் சட்டை கிழிந்து சாலை ஓரமாக அமர்ந்து இருந்தார்

இப்பகுதி மக்கள் நகராட்சி மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் , அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தாமாக முன்வந்து , விபத்துக்களை தடுப்பதற்காக நிலக்கரி துகள்களை கூட்டி பெருக்கி துடைப்பத்தால் அப்புறப்படுத்தினர்