திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி ரோடு சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
சாலையின் கீழ் சுமார் 7 அடி ஆழத்தில் பதிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை சிமெண்ட் குழாய் வெடித்தால் சாலையில் 6 அடி அளவுக்கு பள்ளம் ஏற்பட்டதாகவும், குழாயில் வாயு உற்பத்தி ஆகி உயர் அழுத்தம் ஏற்பட்டு குழாய் வெடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.